ஜூன் 2008
<< | ஜூன் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMVIII |
ஜூன் 2008, 2008 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆனி மாதம் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஜூலை 15 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- ஜூன் 7 - சேக்கிழார் குருபூசை
- ஜூன் 13 - புனித அந்தோனியார் திருநாள்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- ஜூன் 30: இலங்கையில் ஹிக்கடுவை பாலத்தில் சென்று கொண்டிருந்த தொடருந்து தடம் புரண்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- ஜூன் 29:
- இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். (ஏஎஃப்பி)
- சிம்பாப்வேயின் அதிபராக ஆறாவது தடவையாக ரொபேர்ட் முகாபே தெரிவானார். (ஏஎஃப்பி)
- ஐரோப்பிய உதைபந்தாட்டப் போட்டிகள், (யூரோ 2008) இறுதிப் போட்டியில் ஸ்பெயின் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. (பிபிசி)
- ஜூன் 27:
- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது. (புளூம்பேர்க்)
- மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். (ஏஎஃப்பி)
- ஜூன் 26: 365 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் 4-கால் மீன் ஒன்றின் எலும்புக்கூடு லாத்வியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. (சயன்ஸ் நியூஸ்)
- ஜூன் 25:
- அமர்நாத் இந்து ஆசிரமத்துக்கு நில ஒதுக்கிட்டமை குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் மற்றும் சுற்றுப்புற இடங்களில் இடம்பெற்ற கலவரங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சிம்பாப்வே அதிபர் ரொபேர்ட் முகாபேக்கு 1994 இல் வழங்கப்பட்ட சேர் பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக பிரித்தானியா அறிவித்தது. (கார்டியன்)
- ஜூன் 24: இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர் நிகொலஸ் சார்கோசியை வழியனுப்பும் நிகழ்வின் போது இஸ்ரேலிய விமானநிலையத்தில் படைவீரரொருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். (பிபிசி)
- ஜூன் 23: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்தது. (பிபிசி)
- ஜூன் 22: சிம்பாப்வேயில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்து ஜூன் 27 இல் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மோர்கன் சங்கிராய் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (ரொய்ட்டர்ஸ்)
- ஜூன் 21:
- பிலிப்பீன்சில் ஃபெங்சென் சூறாவளி தாக்கியதில் இடம்பெற்ற வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் 600 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- பிலிப்பீன்சில் 700 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் மூழ்கியது. (ரொய்ட்டர்ஸ்)
- மத்திய ஆபிரிக்கக் குடியரசு அதன் இரண்டு தீவிரவாத அமைப்புகளுடன் அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டது. (ஏபி)
- ஜூன் 20:
- பெருங்கடல்களின் இயல்புகளை ஆராய்வதற்காக ஜேசன்-2 என்ற பிரெஞ்சு-அமெரிக்க செய்மதி ஏவப்பட்டது. (பிபிசி)
- பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் பனிக்கட்டிகளைக் கண்டறிந்திருப்பதாக நாசா தெரிவித்தது. (நாசா)
- ஜூன் 18:
- காசா கரையில் ஹமாஸ் அரசுடன் ஜூன் 19 இல் இருந்து போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. (பிபிசி)
- சோமாலி அரசுத்தலைவர் அப்துல்லாகி அகமது கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினார். (பிபிசி)
- ஜூன் 17:
- உலகின் அகதிகள் எண்ணிக்கை 2006 இல் 9.9 மி ஆக இருந்த உலக அகதிகளீன் எண்ணிக்கை 2007 இல் 11.4மி ஆக அதிகரித்திருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர் தெரிவித்துள்ளது. (ஏபி)
- பாஸ்டன் செல்டிக்ஸ் அணி 2008 என்.பி.ஏ. இறுதிப்போட்டிளில் வெற்றிபெற்றது. [1]
- ஜூன் 16: சாட் தீவிரவாதிகள் தலைநகர் உஞ்சமீனா நோக்கிய நகர்வின் போது பில்ட்டைன் என்ற நகரைக் கைப்பற்றினர். (பிபிசி)
- ஜூன் 15: நேபாளத்தில் 240 ஆண்டு கால மன்னராட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து மன்னர் ஞானேந்திரா வசித்து வந்த நாராயண்ஹிதி அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. (தமிழ்முரசு)
- ஜூன் 14:
- நாசாவின் டிஸ்கவறி ஸ்டிஎஸ்-124 என்ற தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமி திரும்பியது. (நாசா)
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற ஒரு குண்டுவெடிப்பில் 4 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். (அசோசியேட்டட் பிரஸ்)
- ஜப்பானில் ஹொன்சூ தீவில் இடம்பெற்ற 6.8 அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூன் 13:
- அமெரிக்கப் புரட்சியின் போது 1780 ஆம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்ட பிரித்தானியாவைச் சேர்ந்த 22-பீரங்கிகள் பொருத்தப்பட்ட ஒண்டாரியோ என்ற போர்க்கப்பலின் பகுதிகள் ஒண்டாரியோ ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது. (யாஹூ செய்திகள்)
- ஆப்கானிஸ்தானில் கண்டகாரில் உள்ள ஒரு சிறைச்சாலையை தலிபான்கள் தாக்கி தமது 390 உறுப்பினர்கள் உட்பட 1,150 கைதிகளை தப்ப வைத்தனர். (ராய்ட்டர்ஸ்)
- ஜூன் 11:
- நேபாளம் குடியரசானதை அடுத்து அந்நாட்டை 240 ஆண்டு காலமாக ஆட்சிசெய்து வந்த ஷா வம்சத்தின் கடைசி மன்னரான கயனேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறினார். (தினக்குரல்)
- கியூபாவில் ஒரே தொழில் செய்பவர்கள் சமமான ஊதியம் பெறும் முறை ஒழிக்கப்பட்டு அவர்களின் உற்பத்தித்திறனுக்கு ஏற்ப ஊதியம் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. (மியாமி ஹெரால்ட்)
- பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்புறத்தில் அமெரிக்க வான் தாக்குதலில் குறைந்தது 10 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் அரசு இத்தாஅகுதலைக் கடுமையாக விமரிசித்துள்ளது. (பிபிசி)
- ஜூன் 8:
- 2008க்கான பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் பந்தய ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ரஃபாயெல் நடால் வெற்றி பெற்றார். (பிபிசி)
- தெற்கு கிரேக்கத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பல கட்டிடங்கள் சேதமடைந்தன. (சிஎன்என்)
- ஜூன் 3: கச்சதீவு அருகில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் சுட்டதில் ஒரு மீனவர் கொல்லப்பட்டார். (தினமலர்)
- ஜூன் 2: புவேர்ட்டோ ரிக்கோவில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலரி கிளின்டன் வெற்றி பெற்றார். ஆனாலும் மொத்தத்தில் பாரக் ஒபாமா முன்னிலையில் உள்ளார். (மக்கள் முரசு), (விஓஏ)
- ஜூன் 1:
- தெற்கு ஈராக்கில் இருந்து 500 அவுஸ்திரேலியப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- மும்பாயில் நடந்த ஐ.பி.எல் துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. (ஃபொக்ஸ் ஸ்போர்ட்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஜூன் 29:
- கிளிநொச்சி, பூநகரியில் இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். (புதினம்)
- முல்லைத்தீவு, துணுக்காயில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் கொல்லப்பட்டார்.(புதினம்)
- ஜூன் 28:
- கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அதிகாலை முதல் முற்பகல் வரை பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். (புதினம்)
- ஜனதா விமுக்தி பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி அமைத்துள்ள தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் சந்ஹிப்பூ ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. (புதினம்)
- ஜூன் 27:
- மட்டக்களப்பு, வாழைச்சேனையில் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவரின் உடல் புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்டது. (புதினம்)
- யாழ், பருத்தித்துறையில் இலங்கைப் படையினரின் வாகனத் தொடரணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படையினர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஜூன் 22:
- வவுனியா பாலமோட்டையில் இலங்கைப் படையினரின் மும்முனை நகர்வு முறியடிக்கப்பட்டதில் 18 படையினர் கொல்லப்பட்டு 31 பேர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலையடுத்து இலங்கைப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டு 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 21:
- கொழும்பு, தெகிவளையில் தமிழ் இளைஞர் ஒருவர் வெள்ளை வான் கும்பலால் கடத்தப்பட்டார். (புதினம்)
- மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டனர். (புதினம்)
- ஜூன் 20: இந்தியாவின் வெளியுறவு அமைச்சகச் செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடங்கிய உயர்மட்டக் குழு முன்னறிவிக்கப்படாத அவசர பயணத்தினை மேற்கொண்டு கொழும்பு வந்தது. (சண்டேடைம்ஸ்)
- ஜூன் 16: வவுனியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 12 இலங்கை காவல்துறையினர் கொல்லப்பட்டு 40 பேர் காயமடைந்தனர். (ஏஎஃப்பி)
- ஜூன் 15: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 13:
- கனடாவில் இயங்கும் உலகத் தமிழர் இயக்கம் அந்நாட்டு அரசினால் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. (தமிழ்நெட்)
- யாழ்ப்பாணத்தில் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்தவர்களை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனத்தை வழிமறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு ஒருவர் படுகாயமடைந்தார். (புதினம்)
- ஜூன் 11:
- வவுனியா மாவட்டம், குஞ்சுக்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறிகடிக்கப்பட்டதில் 19 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 23-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- மன்னார், எருக்கலம்பிட்டி இலங்கைக் கடற்படையினரின் கூட்டுப் படைத்தளம் கடற்புலிகளின் சிறப்பு அணியினரால் வெற்றிகரமாக தாக்கியழிக்கப்பட்டதாகவும், 10 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்), (டெய்லி மிரர்)
- ஜூன் 8:
- முல்லைத்தீவு, மணலாறுப் பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைகளில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளைத் தாம் முறியடித்து 20-க்கும் அதிகமான படையினரைக் கொன்றதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜூன் 6:
- மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காயினர். தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மாணவர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். (புதினம்), (டெய்லி மிரர்)
- கண்டியில் பேருந்துக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- கொழும்பின் புறநகர்ப்பகுதியான மொறட்டுவவில் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டு 47 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூன் 4: கொழும்பு, தெகிவளையில் தொடருந்துப் பாதை அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 18 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- ஜூன் 2:
- முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 2 சிறுவர்கள் உட்பட 6 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடியில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த எருவில்பற்று பிரதேச சபை உப தலைவர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்)
இறப்புகள்
[தொகு]- ஜூன் 6 - ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1940)
- ஜூன் 15 - தங்கம்மா அப்பாக்குட்டி, ஆன்மிகவாதி (பி. 1925)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்