மார்ச் 2010
<< | மார்ச் 2010 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
மார்ச் 2010, ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி பங்குனி மாதம் மார்ச் 15, திங்கட்கிழமை தொடங்கி, ஏப்ரல் 13 புதன்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- மார்ச் 2 - திருவள்ளுவர் குருபூசை
- மார்ச் 13 - மகா சிவராத்திரி (சில நாடுகளில்)
- மார்ச் 18 - செல்லப்பா சுவாமிகள் குருபூசை
- மார்ச் 24 - இராம நவமி
- மார்ச் 26 - யோக சுவாமிகள் குருபூசை
- மார்ச் 29 - பங்குனி உத்தரம்
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- மார்ச் 29:
- ஆங் சான் சூ கீயின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பர்மா தேர்தல்களில் பங்குபற்றுவதில்லை என அறிவித்துள்ளது. (பிபிசி)
- மொஸ்கோ தொடருந்து நிலையங்களில் குண்டுவெடிப்புகள், 38 பேர் இறப்பு
- ரியோ டின்டோ ஊழியர் நால்வருக்கு சீனா நீண்ட கால சிறைத்தண்டனை வழங்கியது.
- நளினியின் விடுதலை மனுவை தமிழக அரசு ஏற்க மறுப்பு
- ஐக்கிய அரபு அமீரகத்தில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
- மார்ச் 28:
- சீனாவில் சுரங்கம் ஒன்றினுள் வெள்ளம் புகுந்ததில் 152 பேர் சுரங்கத்தினுள் சிக்கினர். (பிபிசி)
- ஒந்துராசில் இரு செய்தியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- கொங்கோவில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை குறித்த தகவல் வெளியிடப்பட்டது
- சாவகச்சேரியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
- மார்ச் 27:
- மார்ச் 26:
- கென்டக்கியில் வீதி விபத்தொன்றில் 11 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)
- இட்லர் எழுதிய மெயின் கேம்ப் என்ற நூலை ரஷ்யா] தடை செய்தது. (த இந்து)
- தென் கொரியக் கடற்படைக் கப்பல் வட கொரிய கடற்பரப்பில் மூழ்கியது
- இசுலாமுக்கு மதம் மாறிய பெண் இலங்கை அரசுக்கு எதிராகக் குற்றம் புரிந்ததாகக் கைது
- வங்கத்தில் 1971 இன் போர்க்குற்ற நீதிமன்றம் அமைக்கப்பட்டது
- மார்ச் 25:
- வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தினர் மேற்கொண்ட வாந்தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- ஆஸ்திரேலியக் காவல்துறையினரின் இனவெறியைத் தூண்டும் மின்னஞ்சல்கள்
- மார்ச் 24:
- இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையில் அமைந்திருந்த சர்ச்சைக்குரிய தெற்கு தல்பாட்டி தீவு நீருள் மூழ்கியது. (பிபிசி)
- நோர்வேயில் தொடருந்து தடம்புரண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- அமெரிக்க கணிதவியலாளர் ஜோன் டேட் 2010 ஆம் ஆண்டிற்கான ஏபல் பரிசை வென்றார். (த இந்து)
- திசைநாயகத்துக்கு சிறந்த வெளிநாட்டு செய்தியாளர் விருது
- மார்ச் 23:
- சீனாவில் ஆரம்பப் பள்ளியொன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன் சுட்டதில் 8 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கல்கத்தாவில் பெரும் தீ விபத்து: 24 பேர் உயிரிழப்பு
- நாசி கொலைக்குற்றவாளிக்கு செருமனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது
- மார்ச் 22:
- இசுலாமிற்கு மடம் மாற மறுத்த கிறித்தவர் ஒருவர் பாக்கித்தானில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். (ஏசியா நியூஸ்)
- கொழும்பில் எம்டிவி தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல்
- அமெரிக்க மருத்துவர் பட்டேல் மீது ஆத்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டு
- மார்ச் 21:
- ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தென்னாப்பிரிக்காவில் 1960 சார்ப்வில் படுகொலை நினைவுகூரப்பட்டது
- தெற்கு ஐசுலாந்தில் எரிமலை வெடித்தது
- மார்ச் 20:
- மார்ச் 19:
- சூடானில் இடம்பெற்ற வன்முறைகளில் 13 பேர் கொல்லப்பட்டனர். (அல் ஜசீரா)
- ஹூத்தி இனத்தவருடனான ஆறு ஆண்டுச் சண்டை முடிவுக்கு வந்ததாக ஏமன் அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி அறிவித்தார். (அல் ஜசீரா)
- [[கொலம்பியா]வில் செய்திப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். (வாஷிங்டன் போஸ்ட்)
- லிபியாவுக்கான தனது தூதரை நைஜீரியா திரும்ப அழைத்தது
- மார்ச் 18:
- தார்பூரின் போராளிக் குழு ஒன்றுடன் சூடான் அரசு போர்நிறுத்த உடன்பாட்டை எட்டியது. (அல்ஜசீரா)
- குவாத்தமாலாவின் முன்னாள் தலைவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடிவு
- சீனா தனது முதலாவது பயணிகள் உலங்கு வானூர்தியை வெள்ளோட்டம் விட்டது
- சோயுஸ் விண்கலம் இருவருடன் பாதுகாப்பாகத் திரும்பியது
- மார்ச் 17:
- நைஜீரியாவின் பதி அரசுத்தலைவர் நாட்டின் மந்திரி சபையைக் கலைத்தார். (பிபிசி)
- விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு
- ஷேக்ஸ்பியரினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் புதிய நாடகம் வெளியிடப்பட்டது
- மார்ச் 16:
- மார்ச் 15:
- மார்ச் 14:
- மத்திய ஜப்பானிலும், இந்தோனேசியாவிலும் முறையே 6.6, 6.4 அளவு நிலநடுக்கங்கள் பதிவாயின. (எம்எஸ்என்)(ஏபி)
- பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- மார்ச் 13:
- பர்மாவில் இருந்து 30 நாட்களுக்கு படகொன்றில் முன்னர் புறப்பட்ட ரொகிங்கியா முஸ்லிம் அகதிகள் 93 பேரை மலேசிய அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். (சிட்னி மோர்னிங் எரால்ட்)
- பாகிஸ்தானின் சுவாட் நகரில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 3 காவல்துறையினர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- உலகக்கிண்ண ஹாக்கி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
- மார்ச் 12:
- ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மும்பையில் ஆரம்பமானது. (பிபிசி)
- இந்தியாவில் மேலும் 16 அணு உலைகளை அமைக்க ரஷ்யா உடன்பாடு கையெழுத்திட்டது. (பிபிசி)
- லாகூர் தற்கொலைத் தாக்குதல்களில் 45 பேர் உயிரிழப்பு
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டது
- சோமாலி தலைநகரில் இருந்து மக்களை வெளியேறப் பணிப்பு
- எதிர்ப்புப் பேரணிகளை எதிர்கொள்ள பாங்கொக்கில் 50,000 படையினர் குவிப்பு
- பேராசிரியர் பெரியார்தாசன் இசுலாம் மதத்தைத் தழுவினார்
- மார்ச் 11:
- கிழக்கு ஜெருசலேம் நகரில் மேலும் ஆயிரம் குடிமனைகளைக் கட்டுவதற்கான இசுரேலின் அறிவிக்கப்பட்டது. (த கார்டியன்)
- சோமாலியாவின் தலைநகரில் போராளிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற சண்டையில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- சிலியின் புதிய அரசுத்தலைவராக செபஸ்டியான் பினேரா பதவியேற்றார். அதே நாளில் நாட்டில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாயின. (பிபிசி)
- மார்ச் 10:
- ஆட்கடத்தலைத் தடுக்கும் முகமாக ஆஸ்திரேலியாவும் இந்தோனேசியாவும் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. (நியூஸ்.கொம்)
- 2010 ஆம் ஆண்டின் உலகின் பெரும் பணக்காரராக மெக்சிகோவின் கார்லொஸ் சிலிம் என்பவரை ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவுசெய்தது. பில் கேட்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளார். (போர்ப்ஸ்)
- பாலி குண்டுவெடிப்புக்கு காரணமான போராளி கொல்லப்பட்டார்
- கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்
- இலங்கையில் புதிய பன்னாட்டு விமானநிலையத்தை சீனா அமைக்கவிருக்கிறது
- மார்ச் 9:
- மார்ச் 8:
- லாகூரில் இரகசியக் காவல்துறையினரின் கட்டடம் ஒன்றிண் அருகே மனிதக்குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- காணாமல் போன சைப்பிரசின் முன்னாள் அரசுத்தலைவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
- துருக்கியில் கடும் நிலநடுக்கம்: 57 பேர் உயிரிழப்பு
- மார்ச் 7:
- மார்ச் 6:
- ஈராக்கின் பொதுத்தேர்தலுக்கு ஒரு நாளே இருக்கையில் அங்கு கார்க்குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- பிலிப்பீன்சில் கம்யூனிசப் போராளிகளின் தாக்குதலில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா நிபுணர் குழு; மகிந்த நிராகரிப்பு
- மலேசியக் கிறித்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டது அல்-இசுலாம் சஞ்சிகை
- மார்ச் 5:
- 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனசோர்களை பூமியில் இருந்து அழித்தது சிறுகோள் தாக்கத்தினாலேயே இன்று 41 அறிவியலாளர்கள் இணைந்து ஒரு ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர். (சயன்ஸ்)
- சுமாத்திராவுக்கு அருகே கடலில் 6.8 அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. (சீஎனென்)
- தமிழ்நாட்டில் விரைவில் இலத்திரனியல் மாவட்டத் திட்டம்
- மார்ச் 4:
- தாய்வானில் 6.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. (ஏபி)
- ஆஸ்திரேலியாவில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்தப்பட்டுக் கொலை
- டைனசோருக்கு முந்தைய கால விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
- உத்தரப்பிரதேசத்தில் ஆசிரமம் ஒன்றில் கூட்டநெரிசலில் சிக்கி 63 பேர் உயிரிழப்பு
- மார்ச் 3:
- 2,000 பயணிகளை ஏற்றிச் சென்ற கிரேக்கப் கப்பல் ஸ்பெயினுக்கருகில் 26-அடி கடல் அலையுடன் மோதியதில் இருவர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)
- இந்தியாவின் ஐதராபாத் நகரில் கடற்படைக் கேளிக்கைக் கண்காட்சி ஒன்றின் போது வானூர்திஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நிலவின் வடதுருவத்தில் பெருமளவு பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது
- கிழக்குத் திமோர் அதிபர் படுகொலை முயற்சி வழக்கில் 23 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு
- மார்ச் 2:
- மார்ச் 1:
- சிலியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கச் சென்றுகொண்டிருந்த வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- இந்தோனேசியாவில் 9ம் நூற்றாண்டு பழமையான இந்துக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.
- தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு உருவானது.
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்