உள்ளடக்கத்துக்குச் செல்

பைப்லோஸ்

ஆள்கூறுகள்: 34°07′25″N 35°39′04″E / 34.12361°N 35.65111°E / 34.12361; 35.65111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைப்லோஸ்
جبيل, Βύβλος
ஜெபைல்
நகரம்
byblos
பண்டைய பைப்லோஸ் நகரம்
லெபனான் நாட்டில் பைப்லோஸ் நகரத்தின் அமைவிடம்
லெபனான் நாட்டில் பைப்லோஸ் நகரத்தின் அமைவிடம்
பைப்லோஸ்
லெபனான் நாட்டில் பைப்லோஸ் நகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°07′25″N 35°39′04″E / 34.12361°N 35.65111°E / 34.12361; 35.65111
நாடுலெபனான்
Governorateலெபனான் மலை ஆளுநகரம்
மாவட்டம்ஜெபைல் மாவட்டம்
பரப்பளவு
 • நகரம்5 km2 (2 sq mi)
 • மாநகரம்
17 km2 (7 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்40,000
 • பெருநகர்
1,00,000
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்)
தொலைபேசி குறியீடு+961
இணையதளம்www.jbail-byblos.com
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிபண்பாடு: iii, iv, vi
உசாத்துணை295
பதிவு1984 (8-ஆம் அமர்வு)

பைப்லோஸ் (Byblos) (கிரேக்கம்: Βύβλος‎), உள்ளூர் மக்கள் இப்பண்டைய நகரத்தை ஜெபைல் (Jbeil (அரபு மொழி: جبيل‎) என்று அழைக்கின்றனர். இது லெபனான் நாட்டின் லெபானன் மலை ஆளுநகரத்தில் அமைந்துள்ளது. இப்பண்டைய நகரத்தில் கிமு 5000 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர்.[1] உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாக பைப்லோஸ் நகரம் விளங்குகிறது.[2][3] யுனெஸ்கோ நிறுவனம் 1984-இல் இந்நகரத்தை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக 1984-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது.[4]

நகரத்தின் பண்டைய பெயர்கள்

[தொகு]
இரவில் பைப்லோஸ் கடற்கரை
பைப்லோஸ் நகரத்தின் பண்டைய கட்டிடங்கள்
நவீன பைப்லோஸ் நகரம்
பைப்லோஸ் நகரத்தின் சுடுமண் ஜாடி, காலம் கிமு 1600 - 1200

பண்டைய எகிப்தின் நான்காவது வம்ச பார்வோன் ஆட்சிக் காலத்தில் . (கிமு 2613 – . 2494), பண்டைய எகிப்திய மொழியில் இந்நகரத்தை கெப்னி என குறித்துள்ளது.[5] மேலும் அக்காதிய மொழியில் இந்நகரத்தை குப்லா (Gubla) எனக் குறித்துள்ளது. கிமு 1000-இல் போனீசியா நாட்டை ஆண்ட பிலிஸ்தியர்கள் இந்நகரத்தை பொனீசிய மொழியில் ஜெபல் (Gebal) என அழைத்தனர்.[6][7] எபிரேய மொழி விவிலியத்தில் இந்நகரத்தை கெவல் (Geval) எனக்குறித்துள்ளது.[8]

தற்கால அரபு மொழியில் இந்நகரத்தை ஜிபைல் (Jibayl) என அழைக்கப்படுகிறது. ஜிபைல் என்பதற்கு மலை என்று பொருளாகும். போனீசியா நாட்டில் இருந்த இந்த நகரத்தை பண்டைய கிரேக்கர்கள் பைப்லோஸ் (Býblos) (Βύβλος) என்றும், உரோமானியர்கள் பைப்லஸ் (Byblus) என்றும் பெயரிட்டனர். பண்டைய எகிப்து நாட்டிலிருந்து பாபிரஸ் எனும் காகிதத்தை இறக்குமதி செய்யும் துறைமுக நகராக பைப்லோஸ் விளங்கியது.[9] ஆங்கில மொழியில் Bible எனும் சொல்லின் வேர்ச்சொலான பைப்லோஸ் இப்பண்டைய நகரத்தின் கிரேக்கப் பெயரான பைப்லோஸ் எனும் பெயரிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.[10][11][12]

வரலாறு

[தொகு]

பைப்லோஸ் நகரம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத்திற்கு வடக்கே 42 கிமீ தொலைவில் நடுநிலக் கடற்கரையில் அமைந்துள்ளது. உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாக பைப்லோஸ் நகரம் விளங்குகிறது. இந்நகரம் தொல்லியல் மேடுகளுக்கு புகழ்பெற்றது.[13][14] மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) ( கிமு 8,800 முதல் கிமு 6,500 வரை) காலத்தில் பைப்லோஸ் பகுதியில் மக்கள் குடியேறத் துவங்கினர்.[15][16] புதிய கற்காலத்திய கட்டிட அமைப்புகள் பைப்லோஸ் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிமு 3000 ஆண்டில் பைப்லோஸ் நகரமாக மாறியது.

புதிய கற்காலம் மற்றும் செப்புக் காலம்

[தொகு]

1962-இல் பைப்லோஸ் நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகளில் கிடைத்த புதிய கற்காலம் மற்றும் செப்புக் காலத்திய தீக்கல் கருவிகளை ஜாக்குயுஸ் கவின் வெளியிட்டார்.[17] பைப்லோஸ் தொல்லியல் மேடுகளில் கண்டெடுத்த துவக்க கால மட்பாண்டங்களை ஈ. எஸ். பாய்ங்டன் 1960 காட்சிப்படுத்தினார்.[18][19]

பண்டைய எகிப்திய ஆட்சியில்

[தொகு]

எகிப்தின் பழைய இராச்சிய (கிமு 2686 - 2181) ஆட்சியின் போது பைப்லோஸ் நகரம் எகிப்தின் காலனிப் பகுதியாக விளங்கியது.[13]

எகிப்தின் துவக்க கால அரச மரபுகளின் (கிமு 3150 - 2690) முதல் வம்சம் மற்றும் இரண்டாம் வம்ச ஆட்சியின் போது எகிப்தில் மாடங்கள் கட்டுவதற்கான மரங்கள் பைப்லோஸ் நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. எகிப்தியர்கள் கட்டிய கப்பலுக்கு பைப்லோஸ் கப்பல் என்று பெயரிட்டனர்.[20] எகிப்தின் புதிய இராச்சியத்தின் (கிமு 1550 – 1077) 13-வது வம்ச மன்னரும், பைப்லோஸ் ஆட்சியாளரும் நெருங்கிய தொடர்புடன் இருந்தனர்.

கிமு 1350-இல் பைப்லோஸ் இராச்சிய மன்னர், எகிப்திய மன்னர்களுக்கு களிமண் பலகையில் ஆப்பெழுத்து முறையில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட 60 அமர்னா களிமண் பலகை கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[21]

கிமு 11-ஆம் நூற்றாண்டில் புது எகிப்து இராச்சியம் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது, பைப்லோஸ் நகரம் சுதந்திரமாக செயல்பட்டது.[22] பண்டைய எகிப்தின் 22 மற்றும் 23-ஆம் வம்ச ஆட்சியின் போது, எகிப்திய மன்னர்கள் பைப்லோஸ் நகரத்திற்கு பதிலாக சிதோன் மற்றும் டயர் நகரங்களுக்கு ஆதரவு கொடுத்தனர்.[23]

பைப்லோஸ் அகழாய்வில் கிமு 1200 - 1000 காலத்திய பொனீசிய மொழியில் எழுதப்பட்ட ஐந்து அரச குடும்பம் குறித்தான கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

பண்டைய வரலாறு

[தொகு]

புது அசிரியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் (கிமு 911 – கிமு 609), பைப்லோஸ் நகர இராச்சிய மன்னர்கள், அசிரிய மன்னர்களுக்கு திறை செலுத்தினர். அகாமனிசியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் (கிமு 538 –332), பைப்லோஸ் ஒரு சிற்றரசாக விளங்கியது. ஹெலனியக் காலத்தில் கிரேக்கப் படைத்தலைவர் ஆண்டிகோணஸ் ஆட்சியின் கீழும், பின்னர் எகிப்தின் தாலமைக் பேரரசு (கி மு 305–கி மு 30) கீழும் பைப்லோஸ் நகரம் இருந்தது.

பண்டைய உரோமைப் பேரரசு காலத்தில், பைப்லோஸ் நகரத்தில் ரெசெப் கோயில் விரிவாக மீண்டும் கட்டப்பட்டது. கிமு 30 முதல் பைப்லோஸ் நகரம் உரோமைப் பேரரசு ஆட்சியின் கீழ் சென்றது. பைப்லோஸ் நகரம் சில ஆண்டுகள் சாசானியப் பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. கிபி நான்காம் நூற்றாண்டில் பைசாந்தியப் பேரரசு (கிபி 330–1453) ஆட்சிக் காலத்தில் பைப்லோஸ் நகரத்தில் கிறித்துவம் பரவியது. 636-இல் இசுலாமிய படையெடுப்புகளின் விளைவாக பைப்லோஸ் நகரம் ராசிதீன் கலீபாக்கள் கீழ் சென்றது.

சிலுவைப் போர்கள், மம்லுக் சுல்தானகம், உதுமானியப் பேரரசு காலம்

[தொகு]

1187-இல் அய்யூப்பிய வம்ச மன்னர் சலாகுத்தீன் பைப்லோஸ் நகரத்தை மீண்டும் கைப்பற்றினார். சிலுவைப் போரின் போது கிபி 12 மற்றும் 13-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய கிறித்துவ மன்னர்கள் ஆட்சி செய்த திரிபோலி கவுண்டியின் கீழ் பைப்லோஸ் நகரம் இருந்தது. எகிப்தின் மம்லுக் சுல்தானகத்தின் கீழ் சில ஆண்டுகள் பைப்லோஸ் நகரம் இருந்தது. பின்னர் 1516 முதல் 1918 முடிய பைப்லோஸ் நகரம் துருக்கி இசுலாமிய உதுமானியப் பேரரசின் கீழ் இருந்தது.

சமகால வரலாறு

[தொகு]
பைப்லோஸ் நகர கோட்டைச் சுவர்

லெபனான் நாடு விடுதலை அடையும் வரை 1920 முதல் 1943 முடிய பைப்லோஸ் நகரம் உள்ளிட்ட லெபனான் நாட்டுப் பகுதிகள் பிரான்சு காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

பைப்லோஸ் நகர மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் மொரானைட்டு கிறித்துவர்கள் ஆவார். ஆர்மீனிய கிறித்தவர்கள், கிரேக்க திருச்சபை கிறித்தவர்கள், சியா முஸ்லீம்கள் சிறுபான்மையினத்தவர்களாக உள்ளனர். லெபனான் நாடாளுமன்றத்திற்கான மூன்று உறுப்பினர்களில் இரண்டு மரோனைட்டு கிறித்தவர்களுக்கும், ஒரு சியா இசுலாமியர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[24][25]

சுற்றுலா

[தொகு]

லெபனான் நாட்டின் பைப்லோஸ் நகரக் கடற்கரை சிறந்த சுற்றுலாத் மையமாக உள்ளது.[26] பைப்லோஸ் நகரத்தின் பண்டைய கோட்டை, பைப்லோஸ் துறைமுகம், போனீசியா, கிரேக்க மற்றும் உரோமைப் பேரரசுகளின் கட்டிடங்களின் இடிபாடுகள் சுற்றாலாவாசிகள் காணத்தக்கவையாகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dumper, Michael; Stanley, Bruce E.; Abu-Lughod, Janet L. (2006). Cities of the Middle East and North Africa. ABC-CLIO. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57607-919-8. பார்க்கப்பட்ட நாள் 22 July 2009. Archaeological excavations at Byblos indicate that the site has been continually inhabited since at least 5000 B.C.
  2. "Byblos". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
  3. "The world's 20 oldest cities". The Telegraph. 30 May 2017. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
  4. "Byblos". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
  5. Wilkinson, Toby (2011). The Rise and Fall of Ancient Egypt. New York, NY: Random House Trade Paperbacks Books. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0553384901.
  6. Head & al. (1911), ப. 791.
  7. (Huss 1985, ப. 561).
  8. Ezekiel 27:9.
  9. https://phoenicia.org/byblosmart.html
  10. Brake, Donald L. (2008). A visual history of the English Bible: the tumultuous tale of the world's bestselling book. Grand Rapids, MI: Baker Books. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8010-1316-4.
  11. "Byblos (ancient city, Lebanon) – Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.
  12. Beekes, R. S. P. (2009). Etymological Dictionary of Greek. Leiden and Boston: Brill. pp. 246–7.
  13. 13.0 13.1 Watson E. Mills; Roger Aubrey Bullard (1990). Mercer dictionary of the Bible. Mercer University Press. pp. 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86554-373-7. பார்க்கப்பட்ட நாள் 8 July 2011.
  14. Moore, A.M.T. (1978). The Neolithic of the Levant. Oxford University, Unpublished Ph.D. Thesis. pp. 329–339.
  15. Garfinkel, Yosef (2004). ""Néolithique" and "Énéolithique" Byblos in Southern Levantine Context". In E. J. Peltenburg; Alexander Wasse (eds.). Neolithic Revolution: New Perspectives on Southwest Asia in Light of Recent Discoveries on Cyprus. Oxbow Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84217-132-5. பார்க்கப்பட்ட நாள் 18 January 2012.
  16. Vogel, J.C. Waterbolk, H.T., Groningen Radiocarbon Dates X, Radiocarbon, 14, 6–110 / 105, 1972.
  17. Cauvin, Jacques., Les industries lithiques du tell de Byblos (Liban), L'Anthropologie, vol. 66, 5–6, 1962.
  18. Boynton, E.S., The Ceramic Industry of Ancient Lebanon. (Available in MS in American University of Beirut and in microfilm in Harvard Library) 1960.
  19. Erich, R., Relative chronologies in Old World Archaeology, Chicago, 1954.
  20. Wilkinson, Toby, 1999, Early Dynastic Egypt p.78.
  21. Amarna letters
  22. "Byblos" in: Encyclopædia Britannica, vol. 2, p. 692. Encyclopædia Britannica, Inc., 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85229-553-7
  23. Shaw, Ian: "The Oxford History of Ancient Egypt", page 321. Oxford University Press, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280458-7
  24. "Lebanon Elections 2005". Proud-to-be-lebanese.com. Archived from the original on 2012-12-01. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.
  25. "Elections municipales et ikhtiariah au Mont-Liban" (PDF). Localiban. Localiban. 2010. p. 19. Archived from the original (pdf) on 2015-07-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-12.
  26. Beehner, Lionel (2010-01-03). "Byblos, Lebanon's Ancient Port, Is Reborn". The New York Times. http://travel.nytimes.com/2010/01/03/travel/03next.html. பார்த்த நாள்: 2010-04-27. 

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Aubet, Maria Eugenia. The Phoenicians and the West: Politics, Colonies and Trade. 2d ed. Translated by Mary Turton. Cambridge, UK: Cambridge University Press, 2001.
  • Baumgarten, Albert I., and Philo. The Phoenician History of Philo of Byblos: A Commentary. Leiden: E. J. Brill, 1981.
  • Elayi, Josette, and A. G. Elayi. A Monetary and Political History of the Phoenician City of Byblos: In the Fifth and Fourth Centuries B.C.E. Winona Lake, IN: Eisenbrauns, 2014.
  • Kaufman, Asher S. Reviving Phoenicia: In Search of Identity In Lebanon. London: I.B. Tauris, 2004.
  • Moscati, Sabatino. The World of the Phoenicians. London: Phoenix Giant, 1999.
  • Nibbi, Alessandra. Ancient Byblos Reconsidered. Oxford: DE Publications, 1985.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைப்லோஸ்&oldid=3825938" இலிருந்து மீள்விக்கப்பட்டது