கொடுங்கோன்மை
Appearance
கொடுங்கோன்மை என்பது அரசாங்கத்தின் ஒரு சர்வாதிகார அல்லது எதேச்சதிகார வடிவமாகும், இதில் அதிகாரம் என்பது ஒரு தனிநபரிடமோ அல்லது ஆளும் வர்க்கத்திலோ குவிந்திருக்கும்.
- கொடுங்கோன்மை எப்பொழுதும் பலவீனமானது. - ஜே. ஆர். ஸேவெல்[1]
- காரணமில்லாமலும் கருத்தில்லாமலும் குடிமக்களின் அபிப்பிராயம் கட்டுப்படுத்தப்பெறுவது ஓரளவு கொடுங்கோன்மையாகும். இது அரசனால் அல்லது பிரபுக்களின் ஆட்சியால் அல்லது தேர்ந்தெடுக்கப்பெற்ற சட்டசபையால் செய்யப்படினும் கொடுமையேயாகும். - பிளாக்ஸ்டோன்[1]
- மக்கள் அதை இருக்கவிடுவதால்தான் கொடுங்கோல் ஆட்சி செய்கின்றது. அதன் சக்தியாலன்று. ஷேக்ஸ்பியர்[1]
- அரசன் ஆளவேண்டிய முறைப்படி ஆள்வான் கொடுங்கோலன் தன் விருப்பம் போல் ஆள்வான். அரசன் யாவருடைய நன்மையையும் நாடுவான்; கொடுங்கோலன் சிலருடைய மகிழ்ச்சியையே நாடுவான்.[1]
- சட்டம் முடிவுறும் பொழுது கொடுங்கோல் ஆரம்பமாகின்றது. - வில்லியம் பிட்[1]
- கொடுங்கோலரை எதிர்த்துக் கலகம் செய்தல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகும். - ஃபிராங்க்லின்[1]
- கொடுங்கோன்மைக்கும் அராஜகத்திற்கும் இடையில் அதிகத் தூரமில்லை. - ஜே. பெந்தாம்[1]
- கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லலை செய்தொழுகும் வேந்து. - திருவள்ளுவர்[1]